திமிர்ந்த ஞானச் செருக்கு....

இடம்: ஸ்வல்பர்ட் ,லோங்கியேர்ப்பியேன் (Longyearbyen) , மணி :இரவு 11.30 , நாள் :வியாழக் கிழமை 
அக்டோபர் 8,2020

என் பெயர் அஸ்வதி சுப்புராயன். நான் இப்பொழுது இருக்கும் இடம் வட துர்வதிற்க்கு மிக அருகில் இருக்கும்   ஸ்வல்பர்ட் ,லோங்கியேர்ப்பியேன்  என்னும் ஊரில் ,ஒரு சின்ன விருந்தினர் வீட்டில். ஒரு 5 நிமிடம் முன்னர் என் வாழ்வில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தால் என் உள்ளம், உடல் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கிறது.

இந்த விடியா பகலே முடியா  இரவே என்று இருக்கும் இரவை  கிழித்துக்கொண்டு டெலிபோன் மணி அடித்தது .போனை எடுத்தேன்  
நான்  :ஹலோ ! ம்ம் சொல்லுங்கள் ஓ ! அப்படியா நான் சரோ,சாரி மிஸ்சஸ். சரோஜினி அரவிந்தத்திடம் இந்த நல்ல விஷயத்தை சொல்லி விடுகிறேன் . 
மறுமுனையில் இருந்து யாரோ எதோ சொல்ல. நான் அதற்கு , "ஆமாம் இங்கே பனி  புயல் அடித்துக் கொண்டிருக்குது   அதனால் அனைத்து  தோலை தொடர்பு சாதனங்களும் பயனற்று போய்விட்டன, நான் பேசுவது அரசாங்கத்தின் பாதுகாக்கப்பட்ட போன் லைன்.அதனால்தான் தங்களால் மிஸ்சஸ் சரோஜினியை தொடர்பு கொள்ள முடியவில்லை.நான் இந்த நல்ல விஷயத்தை அவர்களிடம் சொல்லி விடுகிறேன்.அழைத்தமைக்கு  மிக்க நன்றி! பை!

போனை வைத்தபின் ,கனவு போல் இருந்தது, உண்மையில் போன் வந்ததா,என்று என்னையே அழுத்தி கிள்ளி பார்த்துக்கொண்டேன் .ஆ! வலித்தது. ஆம் இது பொய்யில்லை.மனம் பூரிப்பில் துள்ளியது . என் புரிப்பின் நாயகமாய்  நின்றவளை பற்றி மனம் எண்ணியது.

சரோஜினி அரவிந்த் , என் உயிர்த்  தோழி . அவளை சந்தித்த முதல் நொடி நேற்று போல் இன்றும் ஞாபகம் வந்தது . சுமார் 20 வருடங்கள் முன்னால் ,தமிழ் நாட்டில் ,மிக சிறந்த கல்லூரியான ,பி.ஸ்.ஜி  டெக் நிறுவனத்தில் பயோ டெக்னாலஜி கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன் .முதல் வருடம் , மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரி என்பதால், தமிழ் நாட்டின் பல இடங்களில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர் .நல்ல மதிப்பெண் பெற்றும்  நான் தேர்ந்தெடுத்த படிப்பு பயோ டெக்னாலஜி! எங்கள் எச்.ஓ .டி , ஒரு சிறந்த ஆசிரியர். அவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்க்கு பயோ லேப் எடுத்தார். அவரிடம் ரெகார்ட் நோட் கையெழுத்து வாங்க சென்ற போது நடந்த சம்பவம் மனதில் பசுமரத்தாணி போல் இன்றும் இருக்கிறது . நான்  எச்.ஓ .டி  ரூமில் நிற்க , அருகில் இரு ஆசிரியர்கள் பவ்வியமாக நின்றுகொண்டிருந்தனர் , அப்பொழுது  எச்.ஓ .டி க்கு ஒரு போன் கால் வந்தது 'பாரதியார் பல்கலை கழகத்தின்' தமிழ் இல்லகிய கழகத்தின் செயலாளர் அழைத்திருந்தார் , சரோஜினி என்ற பெண் ,கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றதாகவும் , வந்து ருபாய் 2000 பெற்றுருக்கொள்ளும்படி  சொன்னார். எச்.ஓ .டி, யார் அந்த பெண் சரோஜினி என்று கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே , இங்கிலிஷ் டெபார்ட்மென்டிலிருந்து இன்னொரு கால் வந்தது , சரோஜினி என்ற மாணவி ,இங்கிலீஸ் கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றாதாகவும் ,ரூபாய் 1000 வந்து வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார்கள்.எச்.ஓ .டி க்கு மிகுந்த ஆச்சரியம்.'யார் இந்த பெண் சரோஜினி ?'என்று வினவ, அதற்கு அருகில் இருந்த ஆசிரியர்கள் , "அதுதான் சார், அந்த கருமதமநாயக்கன்பட்டி பெண்.மிகுந்த ஏழை , நான் கூட அந்த பெண்ணுக்கு பீஸ் கட்ட பண உதவி செய்ய தங்களிடம் வந்தேனே.அந்த பெண் 7000 ரூபாய் பீஸுக்கு  4000 ரூபாய் ஸ்சோலர்ஷிப் வைத்திருந்தாள் , மீத இருந்த மூவாயிரம் ரூபாயும் தான் உங்களிடம் வந்தேன், அனால் கெட்டிக்கார பெண்,அவளே போட்டிகளில் வெற்றி பெற்று சம்பாரித்துவிட்டாள் . " இந்த சம்பாஷணை என் முன்னாள் நடந்ததை கவனித்த எச்.ஓ .டி, உடனே என்னை அழைத்து, ரெகார்ட் நோட் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.

நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவள்.இந்த பெண் சரோஜினியை பற்றி தெரிந்து கொள்ள ,நானே அவளிடம் சென்று அறிமுகம் செய்துக்கொண்டேன். மாநிறம்,குட்டை யான பெண், ஒல்லியான(ஏழ்மையின் காரணத்தால் சாப்படாதலால் ) உடல் ,லட்சணமான முகம், பார்த்தவுடன் அறிவு கலை வீசும் சிரித்த முகம்.

 தான் ஏழை என்று எப்பொழுதுமே சரோ வறுத்த பட்டு நான் பார்த்ததில்லை.
அவர்கள் இருக்கும் சக்கிலிய வளவ தோட்டத்தை ஸ்டைலாக ' எஸ்.வீ .கார்டன்ஸ்' என்று தான் சொல்லுவாள். அவளுடை தந்தை 'குடி' மகன். தாயார் ,தங்கள் பூர்விகச் சொத்தான கருமத்தம்பட்டியில் 3 ஏக்கர் உப்பு தண்ணி தோட்டத்தில் கொஞ்சம் விவசாயம், கொஞ்சம் ஆடு மாடு மேய்ப்பவர். அழகான கொங்கு தமிழில் தான் பேசுவாள்.4 வருடம் படித்த என்ஜினீரிங்கில்  ,எப்படியும் சரோ ஆடு ,மாடு விற்றாவது 3000 ரூபாய் பணம் திரட்டி பீஸ் கட்டி விடுவாள் , நன்றாக  படித்ததால், மற்ற ரூபாய் 4000, ஸ்சோலர்ஷிப்  கிடைத்தது.

இவள் உழைப்பை பார்த்த தொண்டு நிறுவனம் , இவள் யூ .எஸ்  உள்ள 'உன்வீர்சிட்டி ஒப் கலிபோர்னியா  பெர்க்லேயில் ' மாஸ்டர் டிகிரி படிக்கச் பண உதவி செய்தது. எங்கள் எச்.ஓ .டி தான் , அந்த உதவிக்கு காரணம் என்று எனக்குத் தெரியும். அவளுடன் தோழியான நானும் அதே  மாஸ்டர் டிகிரி செய்தேன்.அதே படிப்புதான்.

தசாவதாரம் படத்தில் கமல் சொல்லுவது போல் "கிருமி கண்ட சோழன் " மாதிரி ,நானும், சரோ வும்  அமெரிக்கா நடத்தும்  'சிந்தடிக் பயோ டெக்னாலஜியில் ' , ' கிருமி கண்ட தமிழர்கள் ' ஆனோம். இருவரும் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் பி.எச் . டி முடித்தோம். அங்கேயே முதலில் துணை பேராசிரியாக பணியாற்றி ,இப்பொழுது பேராசிரியராக பணியாற்றுகிறோம்.சரோவை எங்களுடன் படித்த அரவிந்த் பிடிவாதமாக காதல் செய்து திருமண செய்துகொண்டான் .நான் எங்கள் வீட்டில்  பார்த்த மாப்பிள்ளையாக சுப்புராயனை திருமணம் செய்தேன்.

எங்களுக்கு வாய்த்த கணவர்கள் இருவரும் திறந்த மனப்போக்கு உடையவர்கள் என்பதாலும், அவர்கள் தடுத்தாலும் எங்கள் ஆராய்ச்சியின் மேல் இருக்கும் காதலை அவர்கள் தடுத்திருக்க முடியாது என்பது உண்மை .எங்கள் ஆராய்ச்சி நன்றாக நடந்தது. சரோ, 'கிறிஸ்பிர்' என்று ஜின் எடிட்டிங் (gene-editing) டெக்னாலஜியில்  ஆராய்ச்சி செய்தாள் .  நான் 'சின்த்தெடிக் பயோ வெப்போன் ' இல்  (bio -weapon) ஆராய்ச்சி செய்தேன்.

அடிக்கடி ஊர் பற்றி பேசிக்கொள்வோம்.பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ் நாட்டின் அட்ரஸ் இல்லாத கிராமங்களில்  இருக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்வது என்றெல்லாம் பேசிக்கொள்ளவோம். சரோ ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தாள். உதவி வேண்டும் மாணவர்களுக்கு ,உதவி செய்தாள் .நானும் அந்த  டிரஸ்ட் க்கு  நிறய பண உதவி செய்துள்ளேன். 

நானும் சரோ வும் நோபல் பரிசு பற்றி பேசும்போது சரோ கிண்டலாக சொல்லுவாள், ' உண்மையில் , என் குடும்பம் தான் நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும் , ஏன் என்றால் ஓட்டு வீட்டில் ,டேபிள் பேன் , அதன் முன் ஒரு குடம் நீர் வைத்து, உலகின் முதல் ஏ . சி யை கண்டுபிடித்த வில்லேஜ் விஞானி  நாங்களாகும் ' என்பாள்.  இருவரும் சிரிப்போம்.

போன வருடம் அதாவது 2019, 'கிறிஸ்பிர் ' தொழிநுட்பத்தில் ஒரு பெரும் புரட்சி செய்தாள் சரோ.அவள் ஆராய்ச்சியை ப்ரெசென்ட் செய்து முடித்த பின், நோர்வேயில் இன்டெர்-கான்டினென்டல்  பிரிட்ஜ் கட்டும்  பனியின் ஆராய்ச்சிக்காக, எப்படி பயோ டெக்னாலஜியை,பயன் படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்ய நோர்வே யூனிவர்சிட்டி ஸ்வல்பர்ட் சென்று ஆராய்ச்சி செய்ய எங்களை பணித்தது. அமெரிக்கா அரசாங்கமும் பணித்தது.நோர்வே அரசாங்கம் எங்கள் ஆராய்ச்சிக்கு தேவையான அணைத்து உபகரணங்களும் அளித்து உதவுகிறது .

ஜூன் 16, 2020, கணவன்,பிள்ளைகள் என்று அனைவரையும் நியூ யார்க்கில் விட்டு விட்டு,ஸ்வல்பர்ட் வந்தோம் . வந்த நாளிலிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.எப்பொழுதாவது குடுமபத்தாரிடம் பேசுவோம். வார இறுதியில் ஸ்வல்பர்டின் வரலாற்று சிறப்புமிக்க  தளங்களை காண்போம். 

செப்டம்பர் 13,2020, சரோ வுக்கு நோபல் கமிட்டியிலிருந்து  ஈமெயில் செய்திருந்தார்கள் ,அவளது 'கிறிஸ்பிர்' ஆராய்ச்சி நோபல் பரிசுக்காக பரீசீலிக்கப்படுகிறது என்று சொன்னார்கள்.

சரோ, அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் தான், ஒரு மில்லியன் டாலர் பரிசை என்ன செய்ய போகிறாய் என்று கேட்டேன்.அவள் அதற்கு ,முதலில் கிடைக்கட்டும், கிடைத்தால், நம் தமிழ் நாட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அறிவியல் மேல் தீராத காதலை உருவாக்க என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ செய்வேன் என்றாள் .

இன்று அக்டோபர் 8,2020, ஸ்வல்பர்டில் பெரும் பனி புயல்,அனைத்து  தொலை  தொடர்பு சாதனங்களும் பயனற்று போயின. நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள் இந்நாளே . சரோ அவளுடைய பெயிங் கெஸ்ட் ரூமிற்கு சென்று விட்டாள் . நான் இன்னும் எனக்கு ஒதுக்கப்பட்ட விருந்தினர் வீட்டில் ஆராய்ச்சி  செய்துக் கொண்டு இருந்தேன் .

அவள் நோபல் பரிசு கெமிஸ்ட்ரியில்,பிசிக்ஸில்  வென்றுவிட்டாள் என்றதுதான் அந்த தொலைபேசி அழைப்பு.அவளை தொடர்பு கொள்ள முடியாமல் என்னை அழைத்துள்ளனர்.இந்த பரிசு மிக 
முக்கியமான  பரிசு . மேடம் கியூரி க்கு பின்னார், சரோ தான் இரண்டு சப்ஜெக்ட்டில் நோபல் பரிசு வாங்கும்  முதல் பெண், முதல் இந்திய பெண். இதை நினைக்கும் போதே மனம் புரிக்கிறது. தமிழ் நாட்டில் இருக்கு பெயர் தெரியாத கிராமத்து பெண்கள் இனி அறிவியல் படித்து சாதிக்கலாம் என்பது சரோ வின் மூலம் நிரூபணம் ஆயிற்று .

பொன்னியின் செல்வனில் கல்கி , வானதி பூங்குழலியை காப்பாற்றும் பொழுது,'வாயு வேகம் மனோ வேகம்' என்பார் , அதாவது மனம் எப்படி ஒரு வினாடியில் உலகை சுற்றி வருகிறது என்பார். அது முற்றிலும் உண்மை, இந்தியாவில் ஒரு சாதரண பெண்ணாக இருந்த சரோ விலிருந்து இப்போது நோபல் பரிசு பெற்ற சரோ விடம் எவ்வளுவு விரைவாக மனம் செல்கிறது.

இதோ, இப்பொழுதே கோட் போட்டுக் கொண்டு,போய், என் தோழியை எழுப்பி இந்த தேனினும் இனிய செய்தியை சொல்லப் போகிறேன்!

 











Comments