Posts

Showing posts from December, 2020

தை பிறந்தால் வழி பிறக்கும்

 ஜனவரி 14,2017, காலை 7.30 அன்று காலை மதுரிமாவுக்கு இரண்டு டெலிபோன் கால்கள்  வந்தது. ஒன்று அவளது அன்னை அழைத்திருந்தாள், தை பிறந்ததால் ஒரு நல்ல நாள் பார்த்து குணசீலனுக்கும் மாதுரீமாவுக்கும் திருமணப் பத்திரிக்கை அடித்து விட்டதாகவும் ,தானும் ,மாதுரீமாவின் தந்தையும் சென்னை வந்து திருமண ஜவுளி வாங்கப்போவதாக சொன்னாள்.  மற்றோரு கால் அவனது , அதுதான் அர்ஜுன் கிருஷ்ணமூர்த்தியின் தாயார். அவள் மதுரீமாவிடம் ,"அம்மா , அர்ஜுனை ஒரு நாளாக காணவில்லை , உன்னிடம் தொடர்புகொண்டானா?" என்று கேட்டாள். அதற்கு மதுரிமா  இல்லை என்று சொல்ல ,மிகுந்த வருத்தத்துடன் காலை கட் செய்தாள்.    ஐ ஐ எம்   அஹமதாபாத், எம் பி எ , முடித்து விட்டு , ஒரு பத்திரிக்கை நிறுவனம் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வந்தாள் மதுரிமா. அவள் அபார்ட்மெண்ட் குடியிருப்புக்கு வாட்சமானாக வேலை செய்தவர் சுந்தரம். தீடீரென்று ஒரு நாள் அவர் நெஞ்சு வலி என்று சரிய ,இவள் அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்து அழைத்து சென்றாள். சுந்தரத்துக்கு ஏழ்மையான பின்னணி . மருத்துவ செலவு செய்ய யாரும் இல்லை, அருகில் இருந்தவர்கள...