Posts

Showing posts from November, 2020

இளங்கன்று.......!

 அஜிதா கணினி மேல் இருந்த கண்களை அவள் கைபேசி மேல் செலுத்தினாள். அது மெளனமாக  சிணுங்கியது .காலர் ஐடி யில்  'மைக்ரோசாப்ட்' என்று இருந்தது,உடனே அஜிதா எழுந்தாள் தன்னோடு  ஒரே ரூமில் தங்கிய இரு தமிழ் பெண்களிடம் மௌனமாக முறுவலித்து ,தன் ஓவர் கோட்டை அணிந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரின் டிசம்பர் மாத குளிரையும் பொருட்படுத்தாமல் ,வெளியே நடக்கலானாள்.அவர்கள் இருந்தது புகழ்பெற்ற 'யூனிவர்சிட்டி ஒப் டெக்சாஸ் ' பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அபார்ட்மெண்ட் .  இந்த டெலிபோன் காலுக்காக ஒரு வாரமாக காத்துக் கொண்டிருந்தாள் அஜிதா. இது அமெரிக்காவில் புகழ்  பெற்ற  மிக பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட்,அவளது திறமையை அங்கீகரித்து அவளை இன்டெர்வியூவுக்கு அழைத்திருந்தார்கள் . போன வாரம் சியட்டில்  நகரம் சென்று ஒரு நாள் முழுவதும் இன்டெர்வியூ  செய்தாள்  , லஞ்ச் இன்டெர்வியூ ,குரூப் இன்டெர்வியூ  என்று பல வகையான இன்டெர்வியூக்கள். அனைத்தையும் தன் திறைமை முழுவதும் பயன்படுத்தி சிறப்பாக செய்து முடித்தாள். அந்த இண்டெர்வியூவின் முடிவை பற்றிய ...