தை பிறந்தால் வழி பிறக்கும்
ஜனவரி 14,2017, காலை 7.30
அன்று காலை மதுரிமாவுக்கு இரண்டு டெலிபோன் கால்கள் வந்தது. ஒன்று அவளது அன்னை அழைத்திருந்தாள், தை பிறந்ததால் ஒரு நல்ல நாள் பார்த்து குணசீலனுக்கும் மாதுரீமாவுக்கும் திருமணப் பத்திரிக்கை அடித்து விட்டதாகவும் ,தானும் ,மாதுரீமாவின் தந்தையும் சென்னை வந்து திருமண ஜவுளி வாங்கப்போவதாக சொன்னாள். மற்றோரு கால் அவனது , அதுதான் அர்ஜுன் கிருஷ்ணமூர்த்தியின் தாயார். அவள் மதுரீமாவிடம் ,"அம்மா , அர்ஜுனை ஒரு நாளாக காணவில்லை , உன்னிடம் தொடர்புகொண்டானா?" என்று கேட்டாள். அதற்கு மதுரிமா இல்லை என்று சொல்ல ,மிகுந்த வருத்தத்துடன் காலை கட் செய்தாள்.
ஐ ஐ எம் அஹமதாபாத், எம் பி எ , முடித்து விட்டு , ஒரு பத்திரிக்கை நிறுவனம் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வந்தாள் மதுரிமா. அவள் அபார்ட்மெண்ட் குடியிருப்புக்கு வாட்சமானாக வேலை செய்தவர் சுந்தரம். தீடீரென்று ஒரு நாள் அவர் நெஞ்சு வலி என்று சரிய ,இவள் அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்து அழைத்து சென்றாள். சுந்தரத்துக்கு ஏழ்மையான பின்னணி . மருத்துவ செலவு செய்ய யாரும் இல்லை, அருகில் இருந்தவர்களை கேட்டதில் ,சுந்தரம் வெகு காலமாக பணியாற்றிய கோடாக் குரூப் முதலாளி அர்ஜுன் கிருஷ்ணமூர்த்தி நினைத்தால் உதவ முடியும் என்று அறிந்தாள்.
அர்ஜுனை பத்திரிகையாளர் என்ற முறையில் சந்தித்து , சுந்தரத்தின் நிலைமையை எடுத்து சொன்னாள் மதுரிமா.
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் " என்ற பாரதியின் சொல்லுக்கு ஏற்ப ஒரு நிமிர்வுடன் இருக்கும் மாதுரீமாவை பார்த்தவுடன் 27 வயதான,கல்யாணமாகாத அர்ஜுன் க்ரிஷ்ணமுர்த்திக்கு பிடித்து விட்டது. ஒரு நிமிர்வுடன் ஒரு பெரிய கம்பெனியை நடத்தி வந்த அர்ஜுனை மாதுரீமா பார்த்தவுடன் பிடிக்காவிட்டாலும், அவன் தயாள குணம் ,சுந்தரத்துக்கு இவள் சொன்னதிற்காக உதவியதால் ஒரு நட்பாக பிடித்தது.நட்பு காதலாக மலர்ந்தது.அர்ஜுன் , தனக்கு வேண்டியதை எப்படியும் அடையும் குணமுடையவன் .ஒரு ஆறு மாதமாக விடா முயற்சி செய்து மாதுரீமாவின் நட்பை காதலாக மாற்றியவன்.
மதுரீமாவும் சாதாரணமான பெண் இல்லை. இந்தியாவில் விரல் விட்டு எண்ண கூடிய வெகு சிலரே செல்ல கூடிய ஐ ஐ எம் அஹமதாபாத், எம் பி எ முடித்தவள் .அவள் அவளது பத்திரிக்கை தொழிலை உயிராக நடத்தி வந்தாள். கடினமான பேட்டிகள் , அரசியலில் முக்கிய திருப்பங்களின் காரணிகளை இவளே பேட்டி கண்டாள் .காதல், திருமணமாக மலர வேண்டும் என்று அர்ஜுன் ஆசைப் பட்டான். இவர்களுக்குள் நிச்சியம் செய்து கொண்டார்கள். இன்னும் மதுரிமா வீட்டில் சொல்ல வில்லை . அம்மா ,அப்பா இருவரும் மதுரையில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வந்தனர். அமெரிக்காவில் மகனும், சென்னையில் மகளும் திறமையாக வாழ்வதை பார்த்துவிட்டுத்தான் மதுரை தொண்டு நிறுவனம் ஆரம்பித்தார்கள்.மகள் திருமணம் பற்றி அடிக்கடி பேசுவார்கள் ,மதுரிமா தள்ளி போட்டுக் கொண்டே போனாள்
இந்நிலையில் டிசம்பர் 5,2016 தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். அதற்கு பின் நடந்த அனைத்து அரசியல் விளையாட்டையும் மதுரிமா அவளது பத்திரிக்கையில் மிகவும் வீரியத்தோடு எழுதி இருந்தாள்.நிறைய கொலை மிரட்டல்லகள் பத்திரிக்கை ஆபிசுக்கு வரும் . எதற்கும் பயப் படாத குணமுடையவள் மதுரிமா. ஒரு நாள் அர்ஜுன் கவனத்துக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்தது .தெரிந்ததிலிருந்து அர்ஜுன் குணம் மாறியது.
"வாடிவாசல் திறந்து விட்டால் பிடி மாடு எது பிடி படாத மாடு எது என்று தெரிந்துவிடும் " என்று அப்பொழுது இருந்த அரசியல் நிலைமையை நையாண்டி செய்து எழுதிருந்தாள். இதை பார்த்து விட்டு அர்ஜுன் சிரித்ததோடு, " அம்மா ,தாயே! இப்படித்தான் எழுதுவதா ?" என்று கேட்டான்.
திருமணம் என்று இருவரும் முடிவு செய்தது அக்டோபரில், அப்போதே அர்ஜுன் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் முதலாளியின் மனைவி , இப்படி அரசியல் தலைவர்களை பற்றி கிண்டல் செய்து எழுதுவது சரியா என்று சொல்லி பார்த்தான் .
அப்போது காதல் மயக்கத்தில் இருவருமே அதை கண்டு கொள்ளவில்லை . கொலை மிரட்டல் வர தொடங்கிய பின், அர்ஜுனின் பிடிவாதம் அதிகமாயிற்று. மதுரிமாவின் பிடிவாதமும் பெருகியது . பத்திரிக்கை தொழிலை விடும் படி சண்டை வெடித்தது. இறுதியில் திருமணம் நின்றது. காதல் கசந்தது.
அர்ஜுனின் பிடிவாதம் அதிகமாக, இதற்கு ஒரு முடிவு செய்ய ,மதுரை சென்றாள் மதுரிமா. அங்கே பல மாதங்களாக நச்சரித்த தாய் தந்தை சொன்ன வரனான குணசீலனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டாள். இது அர்ஜுனின் பிடிவாதத்திலிருந்தும் நச்சரிப்பில் இருந்தும் சிறிய நிம்மதி தரும் என்று நினைத்தாள்.
அர்ஜுனிடம் இதை சொன்ன நாள் டிசம்பர் 31, 2016. புது வருட நாளில் மறுபடியும் சந்தித்தார்கள் மதுரிமா, குணசீலனுண்டானான நிச்சயதார்த்தைதை சொன்ன பொது, எதையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் அர்ஜுன் அடிப் பட்டவன் போல் ஒரு சில நிமிடங்கள் தெரிந்தான்.பிறகு சமாளித்துக்கொண்டு நட்போடுடனே மதுரிமாவை அவளது அபார்ட்மெண்டில் விட்டு சென்றான் .
அதற்கு பிறகு அர்ஜுனை பற்றி நினைக்க கூட மதுரிமாவல் முடியவில்லை, ஏன்? அவளை பற்றி அவள் நினைக்க கூட நேரமில்லை .தமிழ்நாடு அரசியல் நிலைமை சீட்டு கட்டு மாளிகை சரிவது போல் சரிந்து கொண்டிருந்தது ,தினமும் ஒரு செய்தி வந்து கொண்டிருந்தது . அதை மக்களுக்கு திறம்பட சேர்க்க அவள் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தாள் .தினமும் இரவு 2.00 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தாள் மதுரிமா.
இன்று , ஜனவரி 14,2017, ஜல்லிக்கட்டு போராட்டம் மதுரையில் வெடிக்கப்போவதை மதுரையிலிருந்து
மதுரிமாவுக்கு செய்தி நேற்றே வந்து இருந்தது. மதுரை, சொந்த ஊராக கொண்ட மதுரிமாவுக்கு அது மிகுந்த உற்சாகத்தை தந்தது . ஜனவரி 14-17 வரை சென்னை மெரினாவில் போராட்டம் நடக்க போவதாக தகவல் வந்திருந்தது , போராட்டத்தின் முனையில் இருப்பவர்களை பேட்டி காண்பதே மதுரிமாவின் முதல் குறிக்கோளாக இருந்தது. அங்கே போராட வந்தவர்களுக்கு தன் பத்திரிக்கை நிறுவனம் மூலமாக மதியம் உணவு அளிக்க ஏற்க்கனவே முடிவு செய்திருந்தாள். அவளது பத்திரிக்கை சிறிய நிறுவனமாக இருந்தும், தன்னால் ஆனா உதவி செய்வது என்று முடிவு செய்ந்திருந்தாள்.
அர்ஜுன் க்ரிஷ்ணமூர்த்தியின் தாயார் அழைத்தப் பின் , மதுரிமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கை ,கால்கள் செயல் இழந்தது போல் இருந்தது. அர்ஜுன் எங்கே போயிருப்பான்?
அவளுக்கு வந்த கொலை மிரட்டல்கள் தந்தவர்கள் அர்ஜுனை குறி வைத்து கடத்தி விட்டார்களோ?
அவன் உயிருக்கே ஆபத்தோ ?போலீஸ் கமிஷனர் அங்கிலுக்கு அழைத்து எப்.ஐ .ஆர் இல்லாமல் அர்ஜுனை தேட சொன்னாள் . அர்ஜுனுக்கு தந்தை இல்லை .தாயார் மட்டும் தான்.தந்தை நடத்திய நிறுவனத்தை பெரியதாக திறம்பட நடத்தி வந்தான்.
அவன் தோழர்களை அழைத்து பேசினாள், யாருக்கும் விவரம் தெரியவில்லை.டிசம்பர் 31 க்கு அப்புறம் அவன் போக்கில் மாற்றம் இருந்ததாகவும் , நிறைய மது பாணம் உட்கொண்டதாகவும் சொன்னார்கள்.அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. அர்ஜுன், மது அருந்துபவனே, ஆனால் எப்போதும் அளவோடு அருந்துவான். பிசினஸ் டீலிங் பேசும் போது மட்டும் அருந்துவான்.
ஒரு வேளை, மதுரிமா திருமணம், என்று எல்லாம் , அறிந்தபின் மனம் உடைந்து மது அருந்தினானோ , மது அருந்தி எதோ ஒரு விபத்தில் மாட்டி கொண்டானோ என்று பலவாறு எண்ணமிட்டாள்.
ஒன்று மட்டும் நிச்சயம் , இன்று மெரினா சென்று போராட்டத்தில் பங்கு பெற முடியாது. அதற்கு அவள் மனதளவில் தயாரில்லை.அவள் துணை செயலாளரை அழைத்து மெரினா செல்ல முடியாது என்றும் , வேற ஒரு நிருபரை செல்லுமாறு பணித்து விட்டு, கார் எடுத்து கொண்டு சென்னை நகர் எல்லாம் தேடினாள் .
நேரம் போக போக, மனம் அலறியது, 'அர்ஜுன் எங்கே சென்றாய் ?, நான் வேண்டுமானால் பத்திரிக்கை தொழிலை விட்டு விடுகிறேன் , மறுபடியும் என்னிடம் வந்துவிடு அர்ஜுன்' , என்று மறுபடியும மறுபடியும் தனக்குள் சொல்லி கொண்டாள்.
கார் தானாக மெரினா சென்று நின்றது. 100,000 மேலான மனித தலைகள், இதில் அர்ஜுனை எங்கே தேடுவது? உள்ள உணர்ச்சி எதோ சொல்ல , அங்கே இருந்தவர்களை உற்று நோக்கினாள் மதுரிமா .
மாலை 6.30 மணி , ஆண்கள் ,பெண்கள் என்று பல சாராரும் இருந்தனர் . மங்கி வந்த இருளில் என்ன வென்று தேடுவது?யாரோ தூரத்தில் போராட்ட காரர்களுக்கு உணவு பொட்டணம் வழங்கி கொண்டிருந்தார்கள். மதுரிமாவுக்கு சுற்ரிர் என்று இருந்தது, தானும் இப்படி உணவு பொட்டணம் தர வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் , ஆனால் இப்பொழுது அர்ஜுனை தேடி கொண்டு ஒரு அனாதை போல் அல்லவா நிற்கிறாள்?மனம் போன போக்கில் நடந்தாள் மதுரிமா . தூரத்தில் கோடாக் நிறுவனம் பலகை தெரிந்தது. அங்கே உணவு அளிக்கப் படுவதாக அறிவிப்பும் இருந்ததது. அருகில் சென்று பார்த்தாள் , அங்கே அர்ஜுன் நின்றுகொண்டு யாருக்கோ உணவு பொட்டலம் கொடுத்துக் கொண்டிருந்தான் . காலை முதல் மாலை வரை தான் பட்ட துக்கம் மதுரிமாவுக்கு நினைவு வந்தது . உடனே அர்ஜுனிடம் ஓடி சென்றாள். அவன் சிரித்து கொண்டே , ' முதலாளி அம்மா வந்து விட்டார்கள்' என்று சொன்னான்.
எங்கே சென்றான் என்று மதுரிமா வினவ, அர்ஜுன் பதில் சொன்னான். மதுரிமா அவள் நிச்சயர்த்தார்த்ததை சொன்ன உடன் வருந்தியதாகவும், மது உண்டதாகவும் சொன்னான். அடுத்த நாள்,மதுரிமா தன்னை காதலிக்கிறாள் என்று மனதிற்கு உறுதியாக தோன்றியதால், தனக்கும் மதுரிமாவை தவிர வேறு வாழ்வில்லை என்று தெரிந்து போய் விட்டதால் . மதுரிமாவுக்கு உதவி செய்வதே தன் கடமை என்று முடிவு செய்தான் என்று சொன்னான்.இந்த முடிவு செய்த உடனே அதற்கு தேவையான முதல் காரியமாக இந்த ஜல்லி கட்டு போராட்டம் மதுரிமாவுக்கு பிடித்த போராட்டம் என்பதால் அதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த போராட்டம் நடத்துபவர்களுக்கு உதவியாக தனது நிறுவனத்தின் பேரில் உணவு வழங்க தேவையான காரியங்கள் மதுரை,கோவை மற்றும் பல நகரங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்ய சென்றதாக சொன்னான் . தாயாரிடம் எங்கே சென்றான் என்று சொன்னால், தேவை இல்லாமல் வருந்துவார்கள் என்று சொல்லாமலே சென்றதாக சொன்னான் .
மதுரிமா காலை முதல் மாலை வரை தான் கொண்ட துக்கத்தை நினைத்து முகம் மாறினாள். அர்ஜுனை அழைத்துக்கொண்டு காருக்குள் ஏறினாள்.காரில் சில நேரம் மெளனமாக அழுதாள். முதலில் தன்னை மன்னித்து விடும் படி அர்ஜுனிடம் கேட்டுக்கொண்டாள். தான் அர்ஜுனை காதலிப்பதாகவும், கடந்த சில மணி நேரம் , அதை தனக்கு ஐயமுற தெரிவித்ததாகவும், தனது பத்திரிக்கையில் இனிமேல் அரசியல் நையாண்டி செய்வதில்லை எனவும் சொன்னாள்.
அதற்கு அர்ஜுன் சிரித்து கொண்டே ' ஏதேது நான் வேதாளத்தை கல்யாணம் செய்தால் முருங்கை மரம் ஏறி தான் ஆக வேண்டும் என்று முருங்கை மரம் ஏற கற்றுக் கொள்ள நினைத்தால் , வேதாளம் மாறுகிறதே ? ' என்று சொன்னான்
மேலும் சற்று சீரியசாக ' மது, இங்கே நடக்கும் போராட்டத்தைப் பார், இங்கே ஜாதி, மதம், ஆண் , பெண் என்ற எந்த பேதம் இல்லாமல் மக்கள் போராடுகிறார்கள் , இந்த மக்களுக்கு ஒரு நல்ல நேர்மையான பத்திரிக்கையாளர் தேவை ! அந்த பத்திரிக்கையாளரான உன்னை என் சுயநலத்துக்காக
வைத்து கொள்ள எனக்கு விருப்ப மில்லை. இந்த நல்ல மக்களுக்கு நல்ல பத்திரிக்கை யாளர் தேவை.நீ உன் பத்திரிக்கையை தொடர்ந்து நடத்து !
மதுரிமா ,'அப்படியென்றால் உங்களுக்கு வருத்தமாக இல்லையா ?' அர்ஜுன் சிரித்துக் கொண்டே ' நான் முருங்கை மரம் ஏற கற்று கொள்கிறேன்' என்று மதுரிமாவிடம் செல்ல அடி வாங்கிக்கொண்டே அவளை இழுத்து அனைத்தான் !
Comments
Post a Comment